கோமாரி நோய் தடுப்பூசி பணி: ஒருகினைப்புக் குழு கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசிபணி 10.06.2004 அன்று துவங்கப்பட உள்ளதை,
தொடர்ந்து மாவட்ட அளவிலான தொடர்பு துறையை சார்ந்த அலுவர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10.06.2024 அன்று துவங்கப்பட உள்ளதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் மாவட்ட அளவிலான தொடர்பு துறையை சார்ந்த அலுவார்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்ததாவது,
கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசிப்பணி 5வது சுற்று 10.06.2024 அன்று தொடங்கப்பட்டு 30 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. முகாமிற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் மாவட்டம் முழுவதிற்கும் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் முகாம் நடைபெறும் கிராமங்களில் கால்நடை வளர்ப்போரிடம் முகாம் நடப்பது தொடர்பாகவும், தடுப்பூசி போடுவதால் உண்டாகும் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், தொடர்பு துறை அலுவலர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் இக்கூட்டத்தில் ஓசூர் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயணி மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள்,
ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா வருவாய் கோட்டாட்சியர் பாபு கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு, ஆயின் பொது மேலாளர் மரு.சுந்தர வடிவேல், கிருஷ்ணகிரி மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய உதவி பேராசிரியர் மற்றும்
கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.இளங்கோவன், உதவி இயக்குநர், பேரூராட்சிகள் / ஊராட்சிகள், உணவு பாதுகாப்பு அலுவலர், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.