பழமை வாய்ந்த கோவில்கள் அளவீடு

மல்லசமுத்திரத்தில் உள்ள பழமை வாய்ந்த சோழீஸ்வரர் மற்றும் அழகுராயபெருமாள் சுவாமி கோவில்கள் நேற்று அளவீடு செய்யப்பட்டது.
மல்லசமுத்திரத்தில் சோழீஸ்வரர், அழகுராயபெருமாள் கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான அடிநிலங்கள் 1997முதல் தனிப்பட்ட சமுதாயத்தின் பெயரில் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2018 ல் சேலம் திருத்தொண்டர் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர், தனியார் பெயரில் இருக்கும் கோவில் நிலங்களை அளவீடுசெய்து, அந்நிலங்கள் சுவாமிகளின் பெயரிலேயே மாற்றியமைக்க வேண்டும் என வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 2023செப்.21ல் வெளியானது. அதில், பழமை வாய்ந்த சோழீஸ்வரர் மற்றும் அழகுராய பெருமாள் கோவில் நிலங்களை அளவீடுசெய்து, அந்நிலங்களை சுவாமிகளின் பெயரிலேயே மாற்றியமைக்க வேண்டும். என தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து நேற்று, இந்து அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, ஈ.ஓ.,க்கள் மணிகண்டன், கிருஷ்ணராஜ், ஆர்.ஐ.,மல்லிகா, வி.ஏ.ஓ.,ராஜா, தலைமை சர்வேயர் கார்த்திகேயன், பிர்கா சர்வேயர் ராபியா, சர்வேயர்கள் செந்தில்குமார், கமல்ராஜ் மற்றும் போலீசார் முன்னிலையில் கோவிலின் அடிநிலங்கள் சர்வே எண்களை கொண்டு அளவீடுசெய்யப்பட்டது.

Tags

Next Story