பணிமனை விடுதியில் மழைநீர் கசிவை தடுக்க நடவடிக்கை

பணிமனை விடுதியில் மழைநீர் கசிவை தடுக்க நடவடிக்கை

காங்கேயம் அரசு போக்குவரத்து பணிமனை விடுதியில் மழைநீர் கசிவை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


காங்கேயம் அரசு போக்குவரத்து பணிமனை விடுதியில் மழைநீர் கசிவை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் போக்குவரத்து பணிமனையில் 90க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிமனையில் அதிகாலை நேரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இரவே இங்கு உள்ள ஓய்வு எடுக்கும் அறையில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் மழை காலங்களில் இந்த ஓய்வறையில் மேற்கூரை பெயர்ந்தும் விரிசல் விட்டுள்ளதால் மழைநீரானது அறையினுள் வழிந்தோடுவதாகவும் சமூக வலை தளங்களில் வீடியோ பரவி வந்த நிலையில் இதன் எதிரொலியாக தற்போது காங்கேயம் பழையகோட்டை சாலையில் அமைந்துள்ள பணிமனையிலுள்ள அலுவலகம் மற்றும் ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு எடுக்கும் விடுதியில் கட்டிடங்கள் சீரமைக்கும் பணியும், சுவர்களிலுள்ள சேதமடைந்த ஜன்னல்களும் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் நாட்களில் அறைகள் மற்றும் அலுவலக கட்டிடங்கள், சேதமடைந்த ஜன்னல் மற்றும் வெளிப்புறச் சுவர்கள் புதுப்பிக்கப்படும் என பணிமனை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story