உடையார்பாளையத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட இறைச்சி கடைக்கு சீல்

உடையார்பாளையத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட இறைச்சி கடைக்கு சீல்
இறைச்சி கடைக்கு சீல்
ஆத்தூரில் மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு இறைச்சி கடைகள் அடைப்ப நிலையில்,அனுமதி இன்றி செயல்பட்ட இறைச்சிக்கடை மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பேரில் நகராட்சி நிர்வாகம் கடைக்கு சீல் வைத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி உட்பட்ட நகரப் பகுதியில் செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு அடைக்கப்பட்டன . இந்நிலையில் ஆத்தூர் உடையார்பாளையம் பிரதான சாலை பகுதியில் பிக்பாஸ் இறைச்சி கடையில் சுற்றிலும் மூடி மறைக்கப்பட்டு கடைக்குள் மீன், ஆட்டுக்கறி,கோழி உள்ளிட்ட இறைச்சிகள் அனைத்தும் அமோக விற்பனை நடைபெற்றது.

பிரதான சாலையில் அமோக விற்பனையில் ஈடுபட்ட இறைச்சி கடைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் இருப்பதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பேரில் ஆத்தூர் நகராட்சி நிர்வாகம் சுகாதார ஆய்வாளர் தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று படுஜோராக விற்பனையில் ஈடுபட்ட இறைச்சி கடைக்கு சீல் வைத்தனர்.

இறைச்சிகள் கடையின் அறையில் வைத்து பூட்டப்பட்டு அந்த அறைக்கு நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் சீல் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story