பழனியில் குடிநீர் ஆதாரத்தில் இறைச்சி கழிவு கலப்பு

பழனியில் குடிநீர் ஆதாரத்தில் இறைச்சி கழிவு கலப்பு

கழிவு கலக்கப்பட்ட தொட்டி

பழனியில் குடிநீர் ஆதாரத்தில் இறைச்சி கழிவு கலக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

பழனி நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோடைகால நீர்த்தேக்கம். இது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் சட்டவிரோதமாக மீன் வளர்க்கப்பட்டு மீன்கள் பிடிக்கப் படுகிறது.

இரவு நேரத்தில் நீர்த்தேக்கதிற்குள் நுழையும் நபர்கள் மீன்களுக்கு உணவாக கோழி இறைச்சி மற்றும் கழிவுகளை கொட்டிச் செல்வதும், இரவு நேரங்களிலேயே மீன்களை பிடித்து செல்வதும் தொடர்கிறது.

பழனி நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீரில், சுயலாபத்திற்காக தனிநபர்கள் இறைச்சி கழிவுகளை கலப்பதால், பழனி வாழ் பொதுமக்களுக்கு கடும் வியாதிகள் பரவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் எழுந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story