சாலையில் வீசப்படும் மாமிச கழிவுகள் : பொதுமக்கள் புகார்
சாலையில் வீசப்பட்டுள்ள கழிவுகள்
குமரி மாவட்டம் நுள்ளிவிளை வள்ளியாற்றின் கரை, கண்டன்விளை ரயில் பாதை அருகே பேயன்குழி மற்றும் மாடத்தட்டு விளை ஆகிய இடங்களில் ஆங்காங்கே வீடுகளில் இருந்து குப்பைகள் பொது மக்களுக்கு இடையூறாக வீசப்படுகின்றன. குறிப்பாக கோழி கழிவுகள், மாமிச உணவுகளின் மீதம் ஆகியவை ஆங்காங்கே கொட்டப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கின்றன.
இதனை நுள்ளிவிளை ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அப்புற படுத்தாத நிலை காணப்படுகிறது. அக்டோபர் மாதம் மழைக்காலம் துவங்கி விட்டதால் மேற்கண்ட குப்பை கழிவுகள் மாமிச உணவுகள் மழையில் இழுத்து செல்லபடுகிறது. மேலும் தெரு நாய்கள் மாமிச உணவுகள் ஏதும் இருந்தால் அதனை கிண்டி கிளறி சேறும் சக்தியாக மாற்றி விடுகிறது. டெங்கு மலேரியா போன்ற நோய்களை பரப்பும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்