தூத்துக்குடியில் பைக் விபத்தில் மெக்கானிக் பலி!

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மெக்கானிக் பலி!

பைல் படம் 

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் படுகாயம் அடைந்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இல்லாங்குடி மகன் மகிழன் (29). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலைபார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த மகிழன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story