திருப்பூரில் நீதிமன்ற வளாகத்தில் சமரசதீர்வு மைய விழிப்புணர்வு பேரணி

திருப்பூரில் நீதிமன்ற வளாகத்தில் சமரசதீர்வு மைய விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

திருப்பூரில் நீதிமன்ற வளாகத்தில் சமரசதீர்வு மைய விழிப்புணர்வு பேரணியை நீதிபதி ஸ்வர்ணம்நடராஜன் தொடங்கி வைத்தார்.
திருப்பூர், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியும், திருப்பூர் மாவட்ட சமரச மையத்தின் தலைவருமான நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் தலைமையில், சமரச தீர்வு மைய நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து சமரச விழிப்புணர்வு பேரணி நடந்தது. நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்து, பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் நீதித்துறை சார்பில் சமரச மைய தீர்வு நாள் கொண்டாடப்படுகிறது. சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமூகத் தீர்வு காண சமரச மையங்கள் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலுலும் திருப்பூர் மாவட்ட சமரச மையத்தின் சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். பேரணியில் எஸ்.சி., எஸ்.டி., வழக்குகளூக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா, மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, கூடுதல் சார்பு நீதிபதி மற்றும் மாவட்ட சமரச மைய செயலாளர் மேகலா மைதிலி, நீதித்துறை நடுவர்கள் பாரதி பிரபா, முருகேசன், நீதிமன்ற வழக்கறிஞர்கள், சமரசர்கள், நீதிமன்ற பணியாளர்கள், கேஎம்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து திருப்பூர் கலைஞர் மத்திய பஸ் நிலையம் வரை சமரச விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் சமரச மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story