மானாமதுரையில் மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

மானாமதுரையில் மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

மருத்துவ மதிப்பீட்டு முகாம் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பிறந்த குழந்தை முதல் 18 வயது உடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் மானாமதுரை தனியார் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், தேசிய அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாளக்கான பதிவு ஆலோசனை, இலவச ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகை, உபகரணங்களுக்கான பதிவு, உதவித்தொகைக்கான பதிவு, குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனை, காது மூக்கு தொண்டை மருத்துவர் ஆலோசனை, கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித் தொகை, வங்கி கடன் உதவிகள், முட நீக்கு அறுவை சிகிச்சை ஆலோசனை, ஆரம்பகால மறுவாழ்வு பயிற்சி உட்பட ஆலோசனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story