திருமலாபுரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் திருமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலநீலிதநல்லூா் வட்டார மருத்துவ அலுவலா் புரோஸ்கான் தலைமையிலான மருத்துவக் குழுவினா், பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். முகாமில் இசிஜி, சா்க்கரை நோய் கண்டறிதல், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளா்கள் சுப்பையா, சங்கரன், சுரேஷ், சுகுமாா், ஆய்வக பரிசோதகா் ஆரோக்கிய மேரி, திருமலைக்குமாா் மற்றும் திருமலாபுரம் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
Tags
Next Story