ஏற்காட்டில் மருத்துவ முகாம்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகேசன் மற்றும் பி.டி.ஓ குணசேகரன் துவக்கி வைத்தனர். முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு பணியின் நிமித்தமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து மருத்துவ குழுவை சேர்ந்த 5 மருத்துவர்கள், ஒரு சித்தா மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினர் ஊராட்சி ஒன்றிய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், போன்ற பல நோய்களுக்கான பரிசோதனைகளை செய்தனர்.
மேலும் காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் இருந்தவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஆண்கள் 37 பேரும் பெண்கள் 50 பேரும் என மொத்தம் 87 பேர் பரிசோதிக்கப்பட்டு பயனடைந்தனர்.முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஏற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார் மற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் மற்றும் ராஜேஷ் செய்திருந்தனர்.