விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மருத்துவ முகாம்

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மருத்துவ முகாம்

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை சென்னை இணைந்து மருத்துவ முகாமை நடத்தினர்.



விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை சென்னை இணைந்து மருத்துவ முகாமை நடத்தினர்.

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விழுப்புரம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி அம்மா அவர்களின் தலைமையில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடைபெற்றது. காலை சரியாக 10 மணிக்கு துவங்கப்பட்டது.

இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் இரத்தம் மற்றும் சர்க்கரை அளவு, பல் பரிசோதனை, கண் பரிசோதனை, இசிஜி, எக்கோ மற்றும் சென்னை அப்போலோ மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனை ஆகியவை சிறப்பாக அளிக்கப்பட்டன. இந்த மாபெரும் மருத்துவ முகாமில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர் பெருமக்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு தங்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செயலாளரும் முதன்மை சார்பு நீதிபதியுமான திரு என் எஸ் ஜெயபிரகாஷ் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

Tags

Next Story