கலைஞரின் மக்களை தேடி மருத்துவ திட்ட முகாம்
கலைஞரின் மக்களை தேடி மருத்துவ திட்ட முகாம்
பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் கலைஞரின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதியில் பேரூராட்சி தலைவர் நாகராஜன் வழிகாட்டுதலின் படி வார்டு கவுன்சிலர் தேவராஜ் தலைமையில் டாக்டர் கலைஞரின் மக்களை தேடி மருத்துவ திட்ட முகாம் மற்றும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனைகள் செய்யப்பட்டு, காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இலவச மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டது. இம்முகாமில் மருத்துவர். ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் அரவிந்த், சுகாதார செவிலியர் விஜயகுமாரி, மருத்துவ பணியாளர் கார்த்திகா, பரப்புரையாளர் பூமணி , கெளசல்யா உட்பட பலர் பங்கேற்றனர். பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் பலரும் இம்முகாமின் மூலம் பயனடைந்தனர்.
Next Story