திருவெண்ணெய்நல்லூர: கார் மோதி மருத்துவக்கல்லூரி மாணவர் சாவு

திருவெண்ணெய்நல்லூர:  கார் மோதி மருத்துவக்கல்லூரி மாணவர் சாவு

மாணவர் பலி

திருவெண்ணெய். நல்லூரில் பாட்டி வீட்டிற்கு சென்றபோது மருத்துவ கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகரை சேர்ந்தவர் குமார் (வயது 45). தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர்களின் மூத்த மகன் கபிலன் என்ற கண்ணன்(18). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் கண்ணன் பெரியசெவலைக்கு சென்றார். அதன் பிறகு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தார். பின்னர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பைத்தாம்பாடியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு புறப்பட்டார்.

திருமுண்டீஸ்வரம் அருகில் வந்தபோது, எதிரே வந்த கார் கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story