திமுகவினர் மருத்துவ உபகரணங்கள் வழங்கல் !

திமுகவினர் மருத்துவ உபகரணங்கள்  வழங்கல் !

திமுக

மு.க ஸ்டாலினின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு டிஐஜி பங்களா அருகில் உள்ள பார்வையற்ற முதியோர் இல்லத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தினம்தோறும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (மார்ச் 11) பாளை டிஐஜி பங்களா அருகில் உள்ள பார்வையற்ற முதியோர் இல்லத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்.

Tags

Next Story