அரசு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ உபகரணம்
மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
விழுப்புரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் குளோ பல் கிராண்ட் என்கிற திட்டத்தின் மூலம் விழுப்பு ரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட் டில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை கூடம் மற்றும் மருத்துவ உபகரணங்களான அறுவை சிகிச்சை கருவிகள், ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் கன்யா ரமேஷ் தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனையின் முதன்மை டாக்டர் லதா, அறுவை சிகிச்சை டாக்டர் விக்டர் பவுலியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க ஆளுநர் ராகவன் கலந்துகொண்டு மேற்கண்ட அறுவை சிகிச்சை கருவிகளை, அரசு மருத்துவமனைக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சேர்மன் சரவணக்குமார், திட்டக் குழு நிர்வாகிகள் பாலகுருநாதன், கந்தன், நம் மாழ்வார், ஸ்ரீதரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிவசுந்தரம், செந்தில்குமார், லோகநாதன், பாபு, ராமகிருஷ்ணன், சிவதியாகராஜன், காங்கேயன், புதுராஜா, சுரேஷ்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.