அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

மருத்துவ உபகரணங்கள் வழங்கல் 

ரோட்டரி சங்கம் சார்பில் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் நவீன டயாலிசிஸ் மெஷின்கள் உள்ளிட்ட 30 லட்சம் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு எடப்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவர் டாக்டர். கோகுலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். ரோட்டரி கிளப் முன்னாள் ஆளுநர் சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர்.வளர்மதி மற்றும் நகர மன்ற தலைவர் பாட்ஷா ஆகியோர் புதிய நவீன டயாலிசிஸ் சென்டர் மற்றும் செவிதிறன் கண்டறியும் மையம் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மையம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நகர மன்ற தலைவர் பாட்ஷா எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் பால் வழங்கப்பட்டுள்ள நவீன டயாலிசிஸ் கருவிகள், செவித்திறன் கண்டறியும் கருவி மற்றும் மார்பக புற்று நோய் கருவி உள்ளிட்ட ரூ. 30 லட்சம் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை இப்பகுதி மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்வதாக கூறினார். நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் சிவசுந்தரம், லோகநாதன், ஒருங்கிணைப்பாளர் யுனிவர்சல் சீனிவாசன், சங்கத் தலைவர் ராஜா, அருண்குமார் மற்றும் மருத்துவர்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள் போல திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story