காவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக காவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

-சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக திருப்பூரில் காவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதனை மாநகர காவல் துணை ஆணையர் வனிதா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

வாகன பயன்பாடு அதிகரித்து வரக்கூடிய நேரத்தில் வாகன விபத்துகளும் அதிகரித்து வருவதாகவும், ஒரு வாகன விபத்து ஒரு தனி மனித குடும்பத்தை மட்டுமல்லாது சமூகத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையில் அதற்கான விழிப்புணர்வு அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் , வாகன விபத்தை கட்டுப்படுத்துவதற்காகவே அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருவதாகவும் இதனை உணர்ந்து வாகன ஓட்டிகள் வாகனம் இயக்கும்போது கவனமாக கையாள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமையும் தொடங்கி வைத்தார். மேலும் போக்குவரத்தில் சிறப்பாக செயல்பட்ட போக்குவரத்து காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

Tags

Next Story