மருத்துவ காப்பீட்டுத் திட்ட பதிவு சிறப்பு முகாம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்டத்தின் அடையாள அட்டையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சி அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட அலுவலர் சுந்தரமூர்த்தி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, கவுன்சிலர்கள் ராஜ், சீனிவாசன், வார்டு செயலாளர்கள் முனியராஜ், பாலா, சங்கர்ராஜ், குருசாமி, நாகேஷ்வரன், தஅரவிந்த் மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story