டிச.29 ல் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட குறை தீர் கூட்டம்
விருதுநகரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிசம்பர் 29ம் தேதி நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவுப்படி, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக் கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் பொருட்டும், மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த குறைதீர்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் 29.12.2023 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற உள்ளது. அரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது விருதுநகர், இணை இயக்குநர், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம்; மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்படி, கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story