மழையால் பாதிக்கப்பட்ட 20 குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை
திண்டிவனம் அருகே ஒலக்கூரில் மழையால் பாதிக்கப்பட்ட 20 குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒலக்கூரில் இருந்து முருங்கை செல்லும் சாலை அருகே 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். இந்த நிலையில் பரவலாக மழை பெய்த தால் குடிசைகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த திண்டிவனம் தாசில்தார் சிவா, ஒலக்கூர் ஒன்றியக் குழு தலைவர் சொக்கலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், தேவதாஸ் ஆகியோர் நேரில் சென்று மழையால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை ஒலக்கூர் பகுதியில் அரசு மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்தனர்.
மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இது தவிர மருத்துவ சிகிச்சையும் வழங் கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட இவர்கள் தங்களுக்கு அரசு சார்பில் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனிடையே மழையால் ஒலக்கூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி அய்யம்மாள் மற்றும் கிருஷ்ணமூர்த்தி மனைவி செல்வி, வண்றாம் பூண்டி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெயக்குமார் ஆகியோரின் கூரை வீடுகளில் உள்ள சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.