மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்: பூக்கள் விலை உயர்வு

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்: பூக்கள் விலை உயர்வு
பூக்கள் விலை உயர்வு
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் சித்திரை திருவிழாவையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் சித்திரை திருவிழாவையொட்டி பூக்கள் விலை உயர்வு மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

மதுரை மட்டுமல்லாது தென்மாவட்ட வியாபாரிகள் தங்கள் பகுதிகளில் பூக்கள் விற்பனைக்காக மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் இருந்து அதிகளவில் பூக்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் நாளை மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் 23ம் தேதி வரை சித்திரைத்திருவிழா, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி 300ரூபாய்க்கு விற்பனையான மதுரை மல்லிகை 500ரூபாய்க்கும்,

பிச்சிப்பூ கிலோ 400 ரூபாய்க்கும், முல்லை கிலோ 300 ரூபாய்க்கும், கனகாம்பரம் 300ரூபாய்க்கும், அரளிப்பூ கிலோ 200 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து கிலோ 100 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 250 ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது, ரோஸ் கிலோ 100ரூபாய்க்கும், துளசி கிலோ 50 ரூபாய்க்கும், தாமரைப்பூ 5ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story