குமாரபாளையத்தில் எல்லோருக்கும் எல்லாம் கூட்டம்

குமாரபாளையத்தில் எல்லோருக்கும் எல்லாம் கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

எல்லோருக்கும் எல்லாம் தலைப்பில் குமாரபாளையத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம்குமாரபாளையத்தில் எல்லோருக்கும் எல்லாம் தலைப்பில் முதல்வர் பிறந்த நாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நாட்டுபுற கலைஞர் திருச்சி கோமகன் இசை நிகழ்ச்சி நடந்தது.

மோடியை கிண்டல் செய்யும் வகையில் முகமூடி அணிந்து பார்வையாளர்களுக்கு வடை கொடுக்கப்பட்டது. சிறப்பு பேச்சாளர் முன்னாள் சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷினி பேசியதாவது: திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் தி.மு.க. ஆட்சியில்தான் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பல மக்கள் மாண்டு போனார்கள்.

பல தொழில்கள் அழிந்து போனது. மாதம் தோறும் அதனை தொடர்ந்து வந்த தலைவர் ஸ்டாலின் தலைமையில் வந்த திமுக அரசு இல்லத்தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தரப்பட்டது. மகளிர் குழுக்களுக்கு பல உதவிகள் செய்து தரப்பட்டது. 2006இல் தலைவர் கலைஞர் இருந்த போதுதான் சத்துணவில் முட்டை, வாழைப்பழம் சேர்த்து, முழுமையான சத்துணவாக வழங்கப்பட்டது. நம் முதல்வர் காலை உணவு திட்டம் தொடங்கியதால், கிராமப்புற மாணவ, மாணவியர் மிக மகிழ்வுடன் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள்.

கிராமப்புற பெற்றோர்கள் துயர் தீர்க்க கொண்டு வரப்பட்ட திட்டம் இது. காலை உணவு திட்டத்தால் 40 சதவீதம் மாணவர் வருகை அதிகரித்துள்ளது. 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் செயல்படுத்தி வருகிறார்கள். நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மாணாக்கர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.

தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் கொண்டு வந்தது தி.மு.க. அரசு. குடிசை இல்லா தமிழகம் என்பது கலைஞர் கனவு. இதற்காக 3 ஆயிரத்து 5௦௦ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்ட வேண்டும் என்பது நமது இலக்கு. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 78 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளது. உழவர் நலனுக்காக தனி நிதி நிலை அறிக்கை முதன் முதலாக கொண்டு வந்தது நமது தமிழகம். திராவிட மாடல் அரசு என்பது எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க செய்வது தான். 24மணி நேரமும் தமிழக மக்களுக்காக சிந்திக்கும் ஒரே தலைவர் நமது முதல்வர். தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் 2.5 சதவீதம் பேர் மட்டுமே. வறுமையை ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையை நாம் விரைவில் அடைவோம். இவ்வாறு அவர் பேசினார்.

நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், துணை தலைவர் வெங்கடேசன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், நிர்வாகிகள் ராஜாராம், செல்வராஜ், ஒன்றிய நிர்வாகி நாச்சிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story