வேளாண் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

வேளாண் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

வேளாண் கூட்டம்

கள்ளகுறிச்சி மாவட்டம், பகண்டைகூட்ரோட்டில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

பகண்டைகூட்ரோட்டில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுந்தரம் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர்கள் புஷ்பவள்ளி, கிருஷ்ணகுமாரி முன்னிலை வகித்தனர். துணை வேளாண் அலுவலர் அன்பழகன் வரவேற்றார்.கூட்டத்தில், ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வரும் 31ம் தேதி வரை நுண்ணீர் பாசன திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.

இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சொட்டுநீர் பாசனம் அமைக்க விருப்பமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற அறிவுறுத்தப்பட்டது.சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதால், கரும்பு, மரவள்ளி, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர் செய்ய உள்ள விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயனடையலாம். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி நன்றி கூறினார்.

Tags

Next Story