குளச்சலில் அதிமுக நிர்வாகிகள்  கூட்டம் 

குளச்சலில் அதிமுக நிர்வாகிகள்  கூட்டம் 
 அதிமுக கூட்டம்
குளச்சல் நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குமரி மாவட்டம் குளச்சல் நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தார். அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரவீந்திர வர்ஷன், முன்னாள் நகர செயலாளர் அருள் தாஸ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆனக்குழி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவை தலைவர் சாகுல் ஹமீது வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவும், குமரி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை கேரளாவுக்கு ஏற்றி செல்வதை தடை செய்ய கேட்டும், குமரி மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலில் செல்லும் போது காற்றினாலும் புயலாலும் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க குளச்சல் பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story