ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் வங்கி அதிகாரிகள் சந்திப்பு கூட்டம்

ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் வங்கி அதிகாரிகள் சந்திப்பு கூட்டம்

வங்கி அதிகாரிகள் சந்திப்பு 

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் வங்கி அதிகாரிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், டி.பி.எஸ். வங்கி அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதற்கு வங்கி துணைக்குழு தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொருளாளருமான கோபாலகிருஷ்ணன் இதற்கு தலைமை தாங்கி பேசினார். பொதுச்செயலாளர் திருக்குமரன் வரவேற்று பேசினார். மும்பையில் இருந்து வந்திருந்த அதிகாரி திரிதிப் சஹா விஜயகுமார் மற்றும் ஜோசப் ஆகியோர் வங்கி சார்பில் கலந்துகொண்டு வங்கி அளிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதிகள் குறித்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் இணைச்செயலாளர் குமார்துரைசாமி, செயற்குழு உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியம், பிரதீப்குமார், அருண் ராமசாமி, மோகன், காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:& கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர் சூழல் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக ஏற்றுமதி தொழில் பாதிப்பை சந்தித்து வந்து கொண்டிருக்கிறது. தரவரிசை மற்றும் வரவு செலவில் உள்ள சிறு இடர்பாடுகளை, அடுத்த ஒரு ஆண்டிற்காவது, முந்தைய பரிவர்த்தனைகளை கணக்கில் கொண்டு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் கடன் கணக்குகளை இயக்க வங்கிகள் உதவ வேண்டும் என வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story