கலெக்டர் தலைமையில்  வாக்கு எண்ணும் அலுவலர்கள் கூட்டம்

கலெக்டர் தலைமையில்  வாக்கு எண்ணும் அலுவலர்கள் கூட்டம்

நாகர்கோவிலில் கலெக்டர் தலைமையில்   வாக்கு எண்ணும் அலுவலர்கள் கூட்டம் நடந்தது.


நாகர்கோவிலில் கலெக்டர் தலைமையில்   வாக்கு எண்ணும் அலுவலர்கள் கூட்டம் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில், இன்று (03.06.2024) வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் பங்கஜ்குமார் சர்மா, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

கடந்த 19.04.2024 அன்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 04.06.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியவுள்ள மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்கள், கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரலிங்கம், அனைத்து உதவி தேர்தல் அலுவலர்கள், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் தனி வட்டாட்சியர் (தேர்தல்) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story