நாகையில் மருத்து பணியாளர்கள் கூட்டம்

நாகையில் மருத்து பணியாளர்கள் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருவறையில் மாயமாகும் மகள்கள் தங்கமகள் உயிர்காக்கும் திட்டத்தின் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருவறையில் மாயமாகும் மகள்கள் தங்கமகள் உயிர்காக்கும் திட்டத்தின் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் நடைபெற்றது. பெண் கருக்கொலைக்கு காரணமாக இருக்கும் மருத்துவர்கள், ஸ்கேன் மையங்கள் மீதம் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும். பெண் கருக்கொலை மற்றும் கருவின் பாலினம் கேட்பதும், அறிவிப்பதும் பாலினத்தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 பிரிவு 6.23(1) மற்றும் 25ன் படி தண்டனைக்குரியது. கருவின் பாலினத்தை கர்ப்பிணி பெண்ணிடமோ, உறவினரிடமோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வேறு ஏதேனும் முறையிலோ அறிவித்தல் பாலினத்தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 பிரிவு 6.23(1) மற்றும் 25ன் படி தண்டனைகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு முடியும் வரை மருத்துவக் கவுன்சிலில் இருந்து மருத்துவரின் பெயர் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். நீதிமன்றத்தில் குற்றம் முதன்முறை நிருப்பிக்கப்பட்டால் 5வருடத்திற்கு மருத்துவக் கவுன்சிலில் இருந்து மருத்துவரின் பெயர் பதிவு நீக்கப்படும். மீண்டும் அதே மருத்துவர் மீது இரண்டாவது முறை குற்றம் நிருப்பிக்கப்பட்டால் மருத்துவக் கவுன்சிலில் இருந்து மருத்துவரின் பெயர் பதிவு நிரந்திரமாக நீக்கப்படும். மேலும் 3ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50,000/- வரை அபராதமும் விதிக்கப்படும். மருந்தகங்களில் மகப்பேறு மருத்துவரின் பரிந்துறை சீட்டு இல்லாமல் கரு கலைப்பு செய்ய எந்த ஒரு மருந்து மாத்திரைகளை வழங்கக்கூடாது என்றும், மீறினால் மருந்தகத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் .ஜோஸ்பின் அமுதா, மாவட்ட சமூகநல அலுவலர் கி.திவ்வியபிரபா, தேசிய சுகாதார திட்ட மாவட்ட ஒருகங்கிணைப்பாளர் .ராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்.எழிலரசி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story