விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொம்பலுர் மேற்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம், பல்வேறு தீர்மானத்துடன் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொம்பலுர் மேற்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம், பல்வேறு தீர்மானத்துடன் நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பொம்பலுர் மேற்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் இரத்தினவேல் தலைமையில், நகர செயலாளர் தங்க.சண்முக சுந்தரம், வரவேற்புரையில், மாவட்டத் துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் மண்டல துணைச் செயலாளர் லெனின் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாநிலசெயலாளர், செங்கோலன் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் மன்னர் மன்னன், பெரம்பலூர் முன்னாள் மாநிலத் துணைச் செயலாளர் தமிழ்குமரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள், கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம், மற்றும் விழுப்புரம், நாடாளுமன்ற தொகுதிகளில் தொல்.திருமாவளவன் மற்றும் துரை.இரவிக்குமார் ஆகியோரை வெற்றி பெற செய்த இரண்டு தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக உழைத்திட்ட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் தமிழக முதல்வருக்கும், பெரம்பலூர் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக நன்றியை தெரிவிக்கப்பட்டது.

மேலும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் அன்று பெரம்பலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் விசிக கட்சி கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்துள்ள ஏழை மாணவர்களுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வதை வெளிப்படையாக அறிக்கை பெற்று அதனை பொது வெளியில் வெளியிட வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொள்வதாகவும், பெரம்பலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், வேப்பந்தட்டை, பெரம்பலூர் நகரத்திற்குட்பட்ட, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பஞ்சமி தரிசு நிலங்கள், நீர்வழி புறம்போக்கு, ஓடை புறம்போக்கு, குட்டை புறம்போக்கு, நிலங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேரடி கவனத்தின் கீழ் மீட்டு கையகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியசெயலாளர்கள் பாஸ்கர் , பிச்சைப்பிள்ளை, எ. வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியசெயலாளர் வெற்றியழகன் கிழக்கு ஒன்றியசெயலாளர் இடிமுழக்கம் மாவட்ட அமைப்பாளர் கள் முரசொலி, பாலன், அய்யாக்கண்ணு, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர், சண்முகம் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story