மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வாயிற்கூட்டம்
வாயிற்கூட்டம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக, தஞ்சை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில், மாவட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலைமையில், ஜி.ஓ-100 முத்தரப்பு ஒப்பந்த பாதிப்புகள், மின்வாரிய ஊழியர் மற்றும் ஓய்வூதியர் நிலை குறித்த விளக்க வாயிற்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநிலத் தலைவர் ஜெய்சங்கர், மாநில உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் விஜயலெட்சுமி, மண்டலச் செயலாளர் எஸ்.ராஜாராமன், கௌரவ தவைலர் து.கோவிந்தராஜூ மற்றும் வட்ட நிர்வாகிகள் உரையாற்றினர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.
Next Story