உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த கூட்டம் - அமைச்சர் பங்கேற்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த கூட்டம் - அமைச்சர் பங்கேற்பு

புரிந்துணர்வு ஒப்பந்தம் 

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பொருளாதார வளர்ச்சி என்பது தொழில் வளர்ச்சியை பொருத்தே உள்ளது. முதலீட்டாளர்களால் தான் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. முதலீட்டாளர்கள் நாட்டின் முதுகெலும்பு எனவும், சிவகங்கை மாவட்டத்தில் சிப்காட், சிட்கோ உள்ளிட்ட தொழில் வளாகங்களால் தொழில்கள் அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் பின் தங்கிய மாவட்டம் என்கிற போக்கை மாற்றி தொழில் வளத்தில் முன்னேற்றம் காண வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் ரூ.300 கோடிக்கு தொழில் தொடங்க நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் 31 தொழில் அதிபர்கள் இலக்கை தாண்டி ரூ.305 கோடிக்கு தொழில் தொடங்கியுள்ளனர். என்றார்.

Tags

Next Story