விழுப்புரத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

விழுப்புரத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

விழுப்புரத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது


விழுப்புரத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சி.பழனி தலைமை தாங்கினார்.

தேர்தல் பொதுப்பார்வையாளர் அகிலேஷ்கு மார் மிஷ்ரா, தேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திரசிங் குஞ்சியால், தேர்தல் செலவினப் பார்வையாளர் ராகுல் சிங்கானியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தற் போது வரை வேட்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் செல வினங்கள், வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரங்கள், தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினரால் வாகன தணிக்கையின்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், ரொக்கப்பணம், சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக் குப்பதிவு எந்திரங்கள், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட தபால் வாக்குகள் நிலை குறித்தும் விவாதித்தனர்.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குப்ப திவு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகள், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள், தேர்தல் தொடர்பான புகார்கள் மீது மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல் வேறு பணிகளின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story