தேர்தல் விதிமீறல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கூட்டம்

வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் கண்காணித்தல், தேர்தல் விதிமீறல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கூட்டம்.

பெரம்பலூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் கண்காணித்தல் மற்றும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநில அளவிலான தேர்தல் சிறப்பு செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் கண்காணித்தல் மற்றும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநில அளவிலான தேர்தல் சிறப்பு செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகம், முன்னிலையில் அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர் ஹரி கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பெரம்பலூர் பராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்குகள் கண்காணிக்கப்படும் விதம், கணக்குகள் பராமரிக்கப்படும் விதம் குறித்து மாநில அளவிலான தேர்தல் சிறப்பு செலவினப் பார்வையாளர் பாலகிருஷ்ணன் விரிவாக கேட்டறிந்தார். பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என தெரிவித்த மாநில அளவிலான தேர்தல் சிறப்பு செலவினப் பார்வையாளர் அவர்கள் மக்கள் எவ்வித தயக்கமும், அச்சமின்றியும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், சார் ஆட்சியர் கோகுல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், விஜயா, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்பு அலுவலர் பிரபு, ஜெயக்குமார் மோசஸ், தேர்தல் கணக்குகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் நாகவல்லி, கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் சரண்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story