வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் தலைமையில் நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மே - 28ம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போது, பாராளுமன்றப் பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுற்று வாக்கு எண்ணும் பணிகள் வரும் ஜூன் - 4 ம் தேதி அன்று ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8.00 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்குவார்கள். பிறகு 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் ஒவ்வொருவரும் காவல்துறையினர் முறையாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், வாக்கு எண்ணுகை முகவர்கள் அனைவரும் 7 மணிக்கு முன்னதாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருகை தந்திருக்க வேண்டும். 7 மணிக்கு மேல் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைவரும் உரிய அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணும் அறையிலும் 14 டேபிள்கள் அமைக்கப்பட்டிருக்கும். வாக்கு எண்ணுகை முகவர்களுக்கு வழங்கப்படும் அடையாள வில்லையில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேசை எண் மற்றும் அவரது கையொப்பம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.

முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேசை தவிர வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடாது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைபேசி, ஐ பேடு, மடிக்கணினி போன்ற மின்சாதனப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை, வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் கோகுல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வைத்தியநாதன், விஜயா , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story