"உரிய நேரத்தில் செலவினங்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்"
பைல் படம்
காஞ்சிபுரத்தில், அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பார்வையாளர் பூபேந்திர சவுத்ரி முன்னிலையில் கூட்டம் நடந்தது.
காஞ்சிபுரத்தில், லோக்சபா தேர்தலுக்காக, வேட்பாளர்கள் செலவு செய்வதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பார்வையாளர் பூபேந்திர சவுத்ரி முன்னிலையில் நேற்று கூட்டம் நடந்தது. இதில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மதுக்கர் ஆவேஸ் மற்றும் கலெக்டர் கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் 95 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம் என்றும் உரிய காலத்திற்குள் தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்ய வேண்டும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் செலவுக்காக பெறப்படும் நன்கொடை தொகையை செலவின பார்வையாளர் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. "
Next Story