பறக்கும் படையினருடன் மாவட்ட கலெக்டர் கலந்தாலோசனை  

பறக்கும் படையினருடன் மாவட்ட கலெக்டர் கலந்தாலோசனை  

ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினருடன் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (04.04.2024) தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினருடன் கலந்தாலோசனை நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை பிரிவில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்கள் எந்தவித அச்சுறுத்தலுக்கும் இடம்தரமால் அனைத்து தரப்பட்ட வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

10 இலட்சத்திற்கு மேல் வாகனத்திலிருந்து கைப்பற்றபட்டால் வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவித்து, முறையாக மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் நாள் நெருங்குவதால் வாகன சோதனையினை தீவரப்படுத்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story