மேக்கேதாட்டு அணை - விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் எதிர்ப்பு
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்: ராயமுண்டான்பட்டி வெ.ஜீவகுமார்: தூர் வாரும் பணிகளை அனைத்து பகுதிகளிலும் செய்ய வேண்டும். குறிப்பாக, கல்லணை தலைப்பு பகுதியில் செய்தால்தான் கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்றடையும். செங்கிப்பட்டி பகுதிக்கு காவிரி நீர் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். கல்லணை தலைப்பு பகுதியில் தூர் வாரும் பணி தொடர்பாக தனியாக கருத்துரு தயார் செய்யுமாறு நீர் வளத் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தால், தில்லி போராட்டத்தைப் போன்று, மேக்கேதாட்டு அணைக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். மாவட்டத்தில் வியாபாரிகள் நெல் விலையைக் குறைக்காமல் இருக்க, அறுவடை செய்யப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். ஆம்பலாப்பட்டு அ.தங்கவேல்: வடகாடு வாய்க்காலில் இருந்து பிரியும் வி.பி. 5 ஆம் எண் வாய்க்கால் மூலம் கடைமடைப் பகுதியில் 800 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதில், தரைத்தளம் அமைத்து, மதகுகளைச் சீரமைக்க வேண்டும்.
அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம்: மேக்கேதாட்டு அணையைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வோம். எனவே, மேக்கேதாட்டு அணை கட்டும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.
சிவவிடுதி கே.ஆர்.ராமசாமி: விவசாயிகளிடமிருந்து நிலக்கடலையை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். எனவே, நெல் கொள்முதலைப் போல அரசே நேரடியாக நிலக்கடலையையும் கொள்முதல் செய்ய வேண்டும். சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: தூர் வாரும் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 400 கோடி போதுமானதல்ல. தூர் வாரும் பணி எந்தெந்த வாய்க்காலில் நடைபெறுகிறதோ, அது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்த இடத்தில் அத்திட்டம் குறித்த தகவல் பலகையை அமைக்க வேண்டும். தூர் வாரும் பணி நடைபெறும் அனைத்து இடங்களிலும் தகவல் பலகை வைக்குமாறு நீர் வளத் துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதனிடையே, 25 ஆண்டுகளாக மரபு வழியில் இயற்கை விவசாயம் செய்து வரும் இயற்கை வேளாண் அறிஞர் கோ.சித்தர் தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற்றதைப் பாராட்டி, அவருக்கு மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். த
மிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்டச் செயலாளர் என்.விகண்ணன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது, தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.25.41 கோடியில் 1,210 கி.மீட்டர் தூரத்திற்கு 261 தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டு, தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு முன்கூட்டியே பிப்ரவரியிலேயே பணிபை. தொடங்குவது வரவேற்கத்தக்கது. தற்போது எந்தெந்த பணிகள் நடைபெறவுள்ளது எந்தப்பகுதியில் நடைபெற உள்ளது சென்ற விவரம் வெளியிடப்பட வேண்டும். மேலும் முறையாக தூர்வாரும் பணிகள் உரிய கண்காணிப்பு குழுக்கள் விவசாயிகள் பங்கேற்போடு அமைக்கப்படுவதும், கண்காணிப்புக்கு உள்ளாக்குவதும் பணி சிறப்பாக நடைபெற உதவிகரமாக இருக்கும். நமது மாவட்டத்தில் பாசனம் பெறும், உய்யக்கொண்டான், கட்டளைக் கால்வாயில் உள்ள பாசன வாய்க்கால்கள், ஏரிகள் தூர்வாரப்படுவதற்காள பணிகள் தொடங்கப்பட வேண்டும். பாசன வாய்க்கால்கள் திருச்சி ஆற்றுப்பாசன பாதுகாப்பு கோட்டத்தில் வருவதால் உறிய ஏற்பாடு செய்து உதவி புரிய வேண்டுகிறேன்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.