மேலப்புலியூர் மாரத்தான் போட்டி: மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டு

மேலப்புலியூர் மாரத்தான் போட்டி: மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டு

மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு

மேலப்புலியூர் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் பிருந்தாவன் சேரிட் டிரஸ்ட் சார்பில் டிசம்பர் 30ஆம் தேதி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உருவாக்கிட ஓடிடுவோம் மாரத்தான் என்ற அடிப்படையில், மாரத்தான் போட்டி நடைபெற்றது, சேரிட்டி டிரஸ்ட் நிறுவனர், காட்சே . கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.

மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷன் பகுதியில் தொடங்கி 12 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த மாரத்தான் போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினார்கள்.

இதில் பெரம்பலூர் ஒன்றியம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வன் கலந்து கொண்டு ஓடி வெற்றி பெற்றார் அதற்கான சான்றிதழ் பரிசு மற்றும் கேடயத்தை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என பலரும் பரிசு பெற்ற மாற்றுதிறனாளி கலைசெல்வனுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலை பெரம்பலூர் வந்த அவருக்கு சமூக ஆர்வலர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story