மேலதானியம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

மேலதானியம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

தேரோட்ட விழா

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா கடந்த ஜூன் 30 ஆம்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

இதையடுத்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஞாயிற்றுக்கிழமை பால்குடத் திருவிழா நடைபெற்றக விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்.

ஆனித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பின் அம்மன் தேரில் எழுந்தருளிய பின் பக்தர்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை மீண்டும் அடைந்தது.

விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையிலான போலீஸார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை மேலத்தானியம் மற்றும் எட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமைமஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

Tags

Next Story