மேல் சோழங்குப்பம் - கிளாம்பாக்கம் புதிய பேருந்து துவக்கம்

மேல் சோழங்குப்பம் - கிளாம்பாக்கம்  புதிய பேருந்து துவக்கம்
X
பேருந்து சேவை துவக்கம் 
திருவண்ணாமலை மேல்சோழங்குப்பத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை செல்லும் புதிய பேருந்து சேவையை எம்.எல்.ஏ சரவணன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம் முதல் ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர் வழியாக கலசபாக்கம், போளூர், மேல்மலையனூர் மற்றும் மேல்மருவத்தூர் வழியாக (சென்னை) கிளாம்பாக்கம் வரை செல்லும் புதிய பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து துவக்கி வைத்தார் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. இந்நிகழ்வில் கலசப்பாக்கம் ஒன்றிய சேர்மன் அன்பரசி ராஜசேகரன், திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story