மேல்மா சிப்காட் விவசாயிகள் நூதன போராட்டம்

மேல்மா சிப்காட் விவசாயிகள்  நூதன  போராட்டம்

விவசாயிகள் போராட்டம் 

ஆரணியில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்து மேல்மா சிப்காட் விவசாயிகள் தலையில் துண்டு கட்டி கையில் இலை ஏந்தி பிச்சையெடுத்து போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை வீதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்க பணிக்காக விவசாய நிலம் கையகப்படுத்துதை கண்டித்து புறக்கணித்து தலையில் பச்சை துண்டு அணிந்து கையில் இலை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர் .

இதனை தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சி புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் கூலி விவசாயி சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான 2 கறவை மாடுகள் இடி தாக்கி இறந்த சம்பவத்தில் பேரிடர் நிவாரண நிதியாக தலா 30ஆயிரம் நிவாரணமாக கோட்டாச்சியர் தனலட்சுமி பாதிக்கட்பட்டவருக்கு வழங்கினார். இதனையடுத்து கனமழை காரணமாக மட்டதாரி சென்னத்தூர் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவரின் வீட்டின் மேற்கூறை மற்றும் பக்க சுவர் இடிந்து விழந்தது நிவாரண தொகையாக 5ஆயிரம் ரூபாயும் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி வழங்கினார். இக்கூட்டத்தில் வட்டாட்சியர் மஞ்சுளா, நகராட்சி ஆணையர் குமரன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மற்றும் வருவாய் துறையினர் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு வேறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story