மேல்மா சிப்காட் - மனு அளிக்க சென்ற விவசாயிகள் கைது
கைது செய்யப்பட்ட விவசாயிகள்
மேல்மா சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 கிராம விவசாயிகள் கடந்த 124 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இவர்களது கோரிக்கை கண்டுகொள்ளாமல் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று கடந்த 124 நாட்களாக போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கையை என்ன என்று கூட கேட்காமல் செயல்படும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் அவரிடம் கொடுக்க இருந்த குடியுரிமை ,வாக்குரிமை சம்பந்தமான ஆவணங்களை செய்யாறு சார் ஆட்சியரிடம் கொடுக்க 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செயப்பட்ட விவசாயிகள் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது,ஏற்கெனவே பல கிராம சபை கூட்டத்தில் கிராமத்தின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிப்காட் திட்டம் விளை நிலத்திலோ அல்லது புறம்போக்கு நிலத்திலோ வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்ற உள்ள நிலையில் தொடர்ந்து நில எடுப்பு அலுவகத்தில் இருந்து பஞ்சாயத்து தலைவர்களை கிராம புறம்போக்கு நிலத்தில் சிப்காட் அமைக்க கிராம சபை தீர்மானம் நிறைவேற்ற கூறி அழுத்தம் தருகிறார்கள். இதை கண்டித்து மேல்மா, குறும்பூர், காட்டுக்குடிசை ,நர்மாபள்ளம், வடாளப்பிறந்தான், இளநீர்குன்றம், அத்தி, நெடுங்கல், தேத்துரை ,வீரம்பாக்கம், மணிப்புரம் ஆகிய 11 கிராம விவசாயிகளும் செய்யாறு வந்து சார் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தோம். என்றனர்.