மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது

மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது
மேல்மலையனூர் ஒன்றியக்குழு கூட்டம்
அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். வட்டார கல்விக்குழு தலை வர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலு வலர் சரவணக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோ சனை நடத்தப்பட்டது. முன்னதாக மிக்ஜம் புயலால் மக்கள் பாதிக் கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொண்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதில் தாசில்தார் முகமது அலி, ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராமசரவ ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் யசோதரை சந்திரகுப்தன், ஷாகின் அர்ஷத், செந்தாமரை கெம்பீரம், முரளி, ரவிச்சந்திரன், வட்டார கல்வி அலுவலர் வெங்கடேசன், தீயணைப்பு நிலைய சிறப்பு அலு வலர் பரஞ்ஜோதி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் குலோத்துங்கன் நன்றி கூறினார்.

Tags

Next Story