பங்காரு அடிகளார் பிறந்தநாள் - ரூ.3.25 கோடியில் நலத்திட்ட உதவி
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மீக குரு பங்காரு அடிகளார் 84 -ஆவது பிறந்தநாள் முன்னிட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள ஆன்மீக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் நலதிட்ட உதவிகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குறு சிறு தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், ஜி. செல்வம், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு ஆகியோர்முன்னிலையில் 3.25 கோடி மதிப்புடைய நல திட்ட உதவிகள் 3500 க்கும் மேற்பட்டோர் வழங்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் வாழ்விழந்தோர் வீட்டை புனரமைக்க 30 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளையும், ஆதிபராசக்தி கல்வி குழுமம் நிறுவனங்களின் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 266 மாணவ மாணவிகளுக்கு 33 லட்சம் மடிகணினி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஆதிபராசக்தி ஆன்மிக சித்தர் பீடம் சார்பில் தமிழ்நாடு மற்றும் உள்ளிட்ட வெளிநாடுகளில் கோடி அர்ச்சனை ஒரே நேரத்தில் செவ்வாடை பக்தர்கள் செய்தனர்.இதற்கான கின்னஸ் சான்றிதழ் கின்னஸ் சாதனை கமிட்டியின் தேர்வாளர் பிராபி ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணை தலைவர் ஸ்ரீ தேவி ரமேஷ் அவர்களிடம் வழங்கப்பட்டது..அன்னதானம் திட்டத்திற்கு ஐஎஸ்ஓ சான்றிதழை அதன் மேலாளர் பழனிவேல் ராஜன் ஆன்மீக லட்சுமி பங்காரு அடியார்களிடம் வழங்கப்பட்டது..இதில் 3600 க்கும் மேற்பட்டவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. இந்தநிழ்ச்சியில் பாண்டிச்சேரி துணை சபாநாயகர் ராஜவேலு, மதுரை மாவட்ட நீதிபதி ரமேஷ் பாபு, தமிழ்நாடு நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.