அழகர்கோவில் மலைக்கு செல்லும் பாதை, தற்காலிகமாக மூடல்

அழகர்கோவில் மலைக்கு செல்லும் பாதை, தற்காலிகமாக மூடல்
கோப்பு படம்
மேலூர் அருகே அழகர்கோவில் மலைக்கு செல்லும் பாதை, தற்காலிகமாக மூடப்பட்டதால் பக்தர்கள் அவதியுற்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்திப் பெற்ற அழகர்கோவிலில், பழமுதிர் சோலை முருகன் கோயில் மற்றும் நூபுரகங்கை தீர்த்த தொட்டிக்கு செல்லும் மலைப் பாதை எந்தவித முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மலை அடிவாரத்தில் இருந்து, மலை மீது உள்ள பழமுதிர் சோலை முருகன் கோயில் மற்றும் நூபுரகங்கை தீர்த்த தொட்டிக்கு செல்லும் பாதை தற்போது சீரமைப்பு பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், பாதையில் உள்ள பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால், இன்று ஒருநாள் மட்டும் மலை பாதையில் எந்தவித வாகனங்களும் செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் எந்தவித முன்னறிவிப்பு இன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி அவதியுற்று வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story