உண்டு-உறைவிட பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்
உண்டு - உறைவிட பள்ளி
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டாப்சிலிப் உண்டு - உறைவிட பள்ளியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளது என ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து அங்கு படிக்கும் மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் ஆனைமலை ஒன்றிய செயலாளர்கள் ஜி கே சுந்தரம், கார்த்திக் அப்புசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story