உதகையில் உதியத்தை வழங்கிய நகர்மன்ற உறுப்பினர்கள்

உதகை நகராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உட்பட 8 நகர மன்ற உறுப்பினர்கள் ஒரு மாத மதிப்பூதியத்தை வெள்ள நிவாரண நிதியாக நகராட்சி ஆணையாளரிடம் வழங்கினர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த கன மழை காரணமாக பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின.

மக்களின் பொதுவுடமைகள் தண்ணீரில் மூழ்கியதால் பெரும் அப்பகுதிமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் நகராட்சி கூட்டம் நடைபெற்று முடிந்த பின்பு நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட 8 பேர் தங்களது ஒரு மாத மதிப்பூதியத்தை வெள்ள நிவாரண நிதிக்காக நகராட்சி ஆணையாளரிடம் வழங்கினர்.

Tags

Next Story