காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழர் மக்கள் கட்சியினர்

காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழர் மக்கள் கட்சியினர்

வாக்குவாதம் 

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தமிழர் மக்கள் கட்சியினர்.

தமிழர் மக்கள் கட்சியை சேர்ந்த பார்த்தசாரதி என்ற வேட்பாளர் தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பாளருடன் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று வந்திருந்தனர், பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினரோ வேட்பாளருடன் நான்கு பேரை மட்டுமே அனுமதிக்க முடியும், இவ்வுளவு பேரை அனுமதி்க்க முடியாது எனக்கூறி தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜ் உட்பட உடன் வந்தவர்களை தடுதது நிறுத்தியதால், தமிழர் மக்கள் கட்சியி்னர் ஏன் தங்களை அனுமதிக்க முடியாது என்ன காரணம், தேர்தல் விதிகளில் எங்கேயாவது கூறப்பட்டிருக்கிறதா சட்டப்படியும், ஜனநாயகப்படியும் இது தவறு நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம், தருமபுரியில் எப்படி தேர்தல் நடக்கிறது என பார்ப்போம், சிறிய கட்சிகளான எங்களை போன்றோர்களை தேர்தலில் போட்டியிடாதாவாறு தடுக்க படுகிறார்கள், அரிசியலமை்ப்பு சட்டப்படி இது குற்றம் இது தொடர்பாக விளக்கம் தர மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் எனவும், வராவிட்டால் தேர்தலில் தமிழர் மக்கள் கட்சி போட்டியிட போவதில்லை நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறி பாதுகாப்பு பணியி்ல் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்பாளருடன் நான்கு பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் மற்றவர்களை அனுமதிக்க முடியாது எதுவாக இருந்தாலும் தங்களது உயர் அதிகாரிகளிடம் பேசிக்கொள்ளுங்கள் திட்டவட்டமாக காவல்துறையினர் தெரிவித்து விட்டதை தொடர்ந்து.வேட்பு மனு தாக்கல் செய்யாமலே தமிழர் மக்கள் கட்சியினர் முழுக்கமிட்டபடி வேட்பாளரை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே சென்ற சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக தருமபுரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

Tags

Next Story