திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்த விழா

திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்த விழா

புரிந்துணர்வு ஒப்பந்தம் 

திருச்செங்கோடு கே. எஸ். ஆர். கல்வி நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்த விழா நடைபெற்றது.

திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து, அமெரிக்க சித்த வேதா மையம் மற்றும் வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்திக் கொண்டனர்.

இவ்விழாவிற்கு கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ரமேஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின்னர் பெங்களுரு ஜெயந்தி ரங்கராஜன் மற்றும் மன்மாமலை ஜோதி ஆகியோர் இன்னிசைப்பாடி சிறப்பித்தனர். விழாவிற்கு நோக்கவுரை அளித்த கல்லூரியின் முதல்வர் இராதாகிருஷ்ணன் அவர்கள் வள்ளலாரின் போதனைகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிகழ்வின் நோக்கம் என எடுத்துரைத்தார்.

அடுத்ததாக, சிறப்பு விருந்தினர்களும் முதல்வர் மற்றும் துறைத்தலைவர்களும் இணைந்து தொடக்கவிழாவிற்கான பெயர்ப்பதாகையினைத் திறந்துவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வருகைப்புரிந்த அமெரிக்காவின் சித்த வேதா மையத்தின் துணைவேந்தர் முனைவர் ஷண்முகமூர்த்தி லெட்சுமணன் அவர்களைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் புவிதா அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பேசிய ஷண்முகம் அவர்கள் நம் தமிழர் பாரம்பரியமும் வைத்திய முறைகளுமே சிறந்தது எனவும்,

நம் தமிழ்மரபின் சிறப்பு. உலகின் வேறு எங்குமே காணமுடியாத ஒன்று எனவும் எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து மற்றுமொரு சிறப்பு விருந்தினராகிய சன்மார்க்க மன்றம் மற்றும் வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கதத்தின் தலைவர்,மருத்துவர் அருள்நாகலிங்கம் அவர்களைக் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சங்கரராம பாரதி அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.

அருள்நாகலிங்கம் ஜயா அவர்கள் தாய்தந்தை இல்லாத மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கியது விழாவின் தனிப்பெருஞ்சிறப்பாக அமைந்தது. மேலும் ஒவ்வொரு வருடமும் பத்து மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் எடுத்துரைத்தார்.

பின்னர் பேசிய அருள்நாகலிங்கம் அவர்கள் வள்ளலாரின் மார்க்கத்தினை அனைவரும் பின்பற்றி வாழுமாறு கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக கே.எஸ்.ரங்கசாமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தங்கவேணி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story