ரஷ்யப் புரட்சியாளர் லெனின் நினைவு தினம் அனுசரிப்பு
லெனின் நினைவு தினம் அனுசரிப்பு
சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் ரஷ்ய புரட்சியாளர் லெனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ரஷ்ய புரட்சியாளரும் இடதுசாரி அமைப்புகளின் உன்னத தலைவராக இருக்கக்கூடிய, மறைந்த ரஷ்ய புரட்சியாளர் லெனின் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினம், பள்ளிபாளையம் அடுத்துள்ள காவேரி ஆர் எஸ் பகுதியில் சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அவருடைய நூற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் லெனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன், மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Next Story